தூத்துக்குடியில் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கும் - அமைச்சர் சிவசங்கர் தகவல்


தூத்துக்குடியில் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கும் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2023 6:48 AM IST (Updated: 22 Dec 2023 11:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பணிமனைகளையும், நீரில் மூழ்கிய பேருந்துகளையும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதாகவும், தூத்துக்குடியில் 45 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், வெள்ளநீர் வடிந்ததும் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை முழுமையாக இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.



Next Story