விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனைவிதைகள்


விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனைவிதைகள்
x

விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனைவிதைகள்

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாட்டின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இணைந்த பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும், மண்ணிற்கு ஏற்றமரமாக விளங்கி வருகிறது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் 25 ஆயிரம் பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயியிக்கு 50 பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----


Next Story