டாக்டர் வீட்டில் 100 பவுன் நகைகள்- ரூ.2 லட்சம் கொள்ளை
டாக்டர் வீட்டில் 100 பவுன் நகைகள்- ரூ.2 லட்சம் கொள்ளை
திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் 100 பவுன் நகைககள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
டாக்டர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ெரயில்வே சாலை ராஜமாணிக்க நாடார் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார்தாமஸ்(வயது 50). இவர் குழந்தைகள் நல டாக்டர் ஆவார். பிரேம்குமார் தாமஸ் மகள் சென்னையில் டாக்டருக்கு படிப்பதால் அவருடைய மனைவி விஜிலா சென்னையில் வீடு எடுத்து தங்கி மகளோடு வசித்து வருகிறார். இந்தநிலையில் தனது மகளை பார்க்க பிரேம்குமார்தாமஸ்
சென்னைக்கு சென்றார்.
கதவு உடைப்பு
நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கார பெண் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு பாதை வழியாக வேலைக்கு வந்தார். அப்போது மெயின் கேட் பூட்டிய நிலையில் உள்ளே இருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து
அவர் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டரின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் வீட்டில் டாக்டர் பிரேம்குமார்தாமஸ் இல்லாததால் எவ்வளவு நகைகள், பணம் கொள்ளை போனது என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்று மதியம் பிரேம்குமார்தாமஸ் வந்தாா்.
100 பவுன் நகைகள்- ரூ.2 லட்சம் கொள்ளை
அவர் வீட்டில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் திருவாரூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்ைத பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மோப்பநாய் ரக்ஸ்சி வீட்டிலிருந்து ெரயில் நிலையம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்ைல.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கொள்ளை நடந்த பிரேம்குமார் தாமஸ் வீட்டுக்கு வந்து கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்திடம் கேட்டறிந்தார். பின்னர் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் வீட்டில் 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.