திருச்செந்தூர் ரெயில் பாதைக்கு 100 ஆண்டுகள் ஆகிறது: நெல்லையில் ரெயிலுக்கு வரவேற்பு


திருச்செந்தூர் ரெயில் பாதைக்கு 100 ஆண்டுகள் ஆகிறது: நெல்லையில் ரெயிலுக்கு வரவேற்பு
x

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதைக்கு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருநெல்வேலி

நெல்லை -திருச்செந்தூர் இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 1923-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு மீட்டர்கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த பாதை மின்சார ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை -திருச்செந்தூர் ரெயில் பாதைக்கு வயது 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நேற்று வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினர்.

இதையொட்டி நெல்லை சந்திப்பில் இருந்து நேற்று காலை 11.05 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் ரெயிலுக்கு பயணிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர். அப்போது என்ஜின் டிரைவருக்கு சால்வை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சொனா.வெங்கடாசலம், சந்திப்பு ரெயில் நிலைய குழு உறுப்பினர் கணேசன், சந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஸ்டேஷன் மாஸ்டருக்கு பொன்னாடை போர்த்தி, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது செய்துங்கநல்லூர் ெரயில் நிலையத்தினை சுத்தமாக வைத்து கொள்வது, பயணிகள் மூலமாக ெரயில் நிலையத்தினை மேம்படுத்துவது உள்பட பல உறுதி மொழிகள் எடுக்கப்பட்டன.நாசரேத்திலும் திருச்செந்தூர் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story