கலசபாக்கத்தில் 1,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்


கலசபாக்கத்தில் 1,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
x

கலசபாக்கத்தில் கொட்டித் தீர்த்த மழையால் 1,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றன. இதில் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகின்றன.

இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை போன்றவை நிலத்தில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. சுமார் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு, நெற் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கான உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story