மதுரையில் 1000 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்; 2 பேர் கைது - இலங்கைக்கு கடத்த முயன்றது அம்பலம்
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கடத்தி வந்த 1000 கிலோ கஞ்சாவை போலீீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கடத்தி வந்த 1000 கிலோ கஞ்சாவை போலீீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா
மதுரையில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து சென்று கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது. உடனே மதுரை கோச்சடை சோதனை சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து இருந்து 2 பேர் தப்பி சென்றனர். மற்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
இலங்கைக்கு கடத்த முயற்சி
அவர்களிடம் விசாரித்த போது மதுரை மேலமாசிவீதியை சேர்ந்த பிரபாகரன், கோவையை சேர்ந்த செந்தில்பிரபு என்பது தெரியவந்தது. போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் லாரியுடன் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அதனை ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், செந்தில்பிரபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1000 கிலோ கஞ்சாவை லாரியுடன் பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற ஜெயக்குமார், ராம்குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள். ைது செய்யப்பட்ட பிரபாகரன் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.