விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முதல் தீவிர வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் மாவட்ட முழுவதும் 1,000 போலீசார் ஈடுபட உள்ளனர். சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் எண் 9442992526-ல் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story