வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன


வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன
x
தினத்தந்தி 8 July 2023 4:53 PM IST (Updated: 9 July 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

வேலூர்

வேலூர்

வேலூரில் சமீபத்தில் மாவட்ட பசுமை குழு கூட்டம் நடந்தது. அதில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என அறிவுறுத்தி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வனத்துறை சார்பில் நேற்று பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தில் உள்ள மரக்கன்றுகளை நட்டனர். வேலூர் சரகத்தில் அலமேலுமங்காபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குடியாத்தம், அமிர்தி, ஒடுகத்தூர் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


Next Story