எல்லையம்மன் கோவில் 1,008 பால்குட உற்சவம்
கும்பகோணம் அம்மன் கோவில் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் 1,008 பால்குட உற்சவம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் அம்மன் கோவில் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் 1,008 பால்குட உற்சவம் நடந்தது.
1,008 பால்குட உற்சவம்
கும்பகோணம் அம்மன் கோவில் தெருவில் உள்ளது எல்லையம்மன் கோவில்.இக்கோவிலில் சித்திரை மாதத்தில் ஆண்டுதோறும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 1,008 பால்குட உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றிலில் இருந்து திரளான பக்தர்கள் காவடி, வேல், 1,008 பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
தீமிதி திருவிழா
பின்னர் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை(செவ்வாய்க்கிழமை) சுந்தர மகா காளியம்மன் வீதி உலாவும், மாலையில் தீமிதி திருவிழாவும், 17-ந் தேதி அம்மன் புறப்பாடு மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தெரு மக்கள், முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.