100-வது நவீன கருவி பொருத்தும் நிகழ்ச்சி


100-வது நவீன கருவி பொருத்தும் நிகழ்ச்சி
x

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறவிலேயே காதுகேளாதோருக்கான 100-வது நவீன கருவி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறவிலேயே காதுகேளாதோருக்கான 100-வது நவீன கருவி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுவை சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பாக பிறவிலேயே காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளுக்கு 100-வது நவீன கருவி பொருத்தும் நிகழ்ச்சி ( செவிச்சுருள் வளை கருவி)் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நேரு தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ், அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் அர்ஷியா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை டாக்டர் பழனியப்பன் கூறும்போது, காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமச் செவிலியர்கள், டாக்டர்களால் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்குச் செவிப் பரிசோதனை செய்து காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டார்கள் என்றார்.

100-வது குழந்தை

சிறப்பு விருந்தினராக பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கலந்து கொண்டு பேசும்போது, இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும் இதில் 100-வது குழந்தைக்கு செவிச்சுருள் வளை கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் பழனியப்பன் மற்றும் அறுவை சிகிச்சை குழுவினர் சிறந்த முறையில் செய்து வருகின்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் பிறவி காது கேளாத குழந்தைகள் பிறக்கின்றன. இதற்கு உறவு முறை திருமணங்கள் தான் காரணம். இதனை தவிர்க்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது வரை தமிழகத்தில் 5,300 பேர் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். ஒரு குழந்தைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு மேற்கொள்ளப்படுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் 100-வது குழந்தைக்கு செவிச்சுருள் வளை கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை காணொலி காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் அண்ணாமலை, கோகுல், மற்றும் மருத்துவ மாணவர்கள், நர்சுகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story