திண்டுக்கல் மாவட்டத்தில் 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்


திண்டுக்கல் மாவட்டத்தில் 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விடுமுறை அளிப்பதில் முரண்பாடு இருந்ததால் 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட வேண்டும். இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story