105 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை
நீடாமங்கலம் அருகே மக்கள் நேர்காணல் முகாமில் 105 மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றாா்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே மக்கள் நேர்காணல் முகாமில் 105 மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றாா்.
மக்கள் நேர்காணல் முகாம்
நீடாமங்கலம் வட்டம் ராயபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கி 105 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:-
அரசின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராயபுரம் மேல்நிலைப்பள்ளிக்கான இடம் தேர்வு செய்து தரப்படும். இங்கு கோரப்பட்ட கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இங்கு பயனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினாா்.
நடவடிக்கை
முகாமில் 25 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், 4 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 4 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் மற்றும், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 7 பெண்களுக்கு தையல் எந்திரங்களும், ஒருவருக்கு இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 259 மனுக்களில் 105 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முகாமில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் கீர்த்தனாமணி, ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணி சுந்தர், ஊராட்சி தலைவர்கள் பாஸ்கர், மோகன் தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். முடிவில் சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ராஜகணேஷ் நன்றி கூறினார்.