தர்மபுரியில் 69 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்


தர்மபுரியில் 69 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நடந்த விழாவில் 69 பயனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

உரிமைகள் தின விழா

தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுயமாக தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள டாம்கோ நிறுவனத்தின் மூலம் தனிநபர் காலக் கடன் திட்டம், சுயஉதவிக்குழு மூலம் சிறுகடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, மகப்பேறு, கருச்சிதைவு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கு குறைந்தபட்ச தேவை கல்வி ஆகும். சிறுபான்மையின மாணவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, தொடர்ந்து கல்வி பயில்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடையும் பொருட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

ரூ.10½ லட்சம்

இதனை தொடர்ந்து, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டிலும் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை உள்பட மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழகினார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், உதவி கலெக்டர் கீதா ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகர், சிறுபான்மையின சங்க நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story