105 பனைமரங்களை வெட்டி சாய்த்ததால் பரபரப்பு


105 பனைமரங்களை வெட்டி சாய்த்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே 105 பனைமரங்களை வெட்டி சாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே சிறைக்குளம் ஊராட்சி புதுநகர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சோலார் மின்நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக சோலார் மின்நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்த 105 பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலாடி தாசில்தார் முருகவேல், மண்டல துணை தாசில்தார் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.டி.ஓ.விடம் பரிந்துரை செய்யப்பட்டது. வெட்டிய பனை மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story