திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருத்தணிக்கு 106 சிறப்பு பஸ்கள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருத்தணிக்கு 106 சிறப்பு பஸ்கள்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருத்தணிக்கு 106 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருத்தணிக்கு 106 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிது.

ஆடி கிருத்திகை வழிபாடு நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர்.

இதனையொட்டி திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டலம் மூலம் 106 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் வில்வாரணி மற்றும் காஞ்சி குன்று மேடு முருகன் கோவிலுக்கும் நாளை திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 47 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story