விஷமங்கலம் ஊராட்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை


விஷமங்கலம் ஊராட்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை
x

விஷமங்கலம் ஊராட்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் வருடத்திற்கு சுமார் 140 சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் உரிய நேரத்தில் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசு 108 ஆம்புலன்ஸ் சேவை தேவை என திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ சேவை செய்ய அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி விஷமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எ.மோகன்ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி வரவேற்றார்.

திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story