108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பு


108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:30 AM IST (Updated: 9 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்ஸ், ஊழியர்கள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்


சேலத்தில் இருந்து மதுரைக்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பயணம் செய்தார். அவர் மதுபோதையில் கூச்சல் போட்டதுடன் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.


பஸ்சில் இருந்து இறங்கியதும் அந்த நபருக்கு மதுபோதை தலைக்கேறியது. இதையடுத்து சாலையோரத்தில் அவர் படுத்து தூங்கிவிட்டார். இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள் அந்த நபர் பஸ்சில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக நினைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேடசந்தூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது தான் அவர் மதுபோதையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினரை தேவையில்லாமல் அலைக்கழிப்பு செய்கின்றனரே என புலம்பியபடியே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.



Next Story