108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு
x

குடியாத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பீமராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் அறிக்கை வாசித்தார். அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் ஷாபுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சென்னை மண்டல செயலாளர் மகேஷ், மாநில பொருளாளர் சாமுவேல், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

மாநாட்டில் சட்ட விரோதமாக வாய்மொழி உத்தரவாக நிர்வாகமே பணி வழங்காமல் தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு செய்யப்படுவதற்கும், செயற்கையாக ஆள் பற்றாக்குறை ஏற்படுத்துவதற்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சங்க கொடியேற்றப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story