26 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைப்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புத்தாண்டையொட்டி 26 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் கண்ணன் தெரிவித்தார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புத்தாண்டையொட்டி 26 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் கண்ணன் தெரிவித்தார்.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிபோதை மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது ,பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்க நேரிடும்.
108 ஆம்புலன்ஸ்
அந்த நேரத்தில் விபத்துகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 26 ஹாட்ஸ்பாட் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் கண்ணன் கூறியதாவது:-
விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பெருமுகை, கிரீன் சர்க்கிள், கொணவட்டம், பொய்கை, கந்தனேரி, அணைக்கட்டு மூலைக்கேட், தொரப்பாடி, நெல்வாய், குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், ஆற்காடு பைபாஸ், வாலாஜா பைபாஸ், பூட்டுதாக்கு, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய பகுதிகளும்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், பச்சகுப்பம், மின்னூர், வாணியம்பாடி, சோமலாபுரம், நாட்டறம்பள்ளி, வெலக்கல்நத்தம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் நகர் ஆகிய 26 பகுதிகள் ஹாட்ஸ்பாட் இடங்களில் இன்று இரவு நாளை வரை ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.