108 ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு  பிரசவம்
x

பேரணாம்பட்டு அருகே 108 ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரி குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் கூலி தொழிலாளி. இவரது மனைவி விந்தியா (வயது 23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் இரண்டாவது முறையாக விந்தியா கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியான விந்தியாவிற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பல்லல குப்பம் கிராமம் அருகே சென்றபோது விந்தியாவுக்கு பிரசவ வலியால் துடித்தார்.

அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வினோசங்கர், வழியில் ஆம்புலன்சை நிறுத்தி பிரசவம் பார்த்தார்.

பிரசவத்தில் அதிகாலை 4.50 மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவ அதிகாரி கலைச்செல்வி, மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்தனர்.


Next Story