108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குவா குவா
x

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

வேலூர்

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

விவசாயி

குடியாத்தம் தாலுகா லட்சுமணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, விவசாயி. அவரது மனைவி காயத்திரி. இவர் கர்ப்பமாக இருந்தார். மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி, 108 ஆம்புலன்சில் செல்ல தயாராகினர். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதில் மருத்துவ உதவியாளர் சதீஷ் இருந்தார். வாகனத்தை டிரைவர் குமரவேல் ஓட்டினார்.

பெண் குழந்தை பிறந்தது

சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை நோக்கி சென்றன.

பொய்கை அருகே செல்லும் வழியில் காயத்திரிக்கு பிரசவவலி அதிகரித்தது.

இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் சதீஷ் பிரசவம் பார்த்தார். நள்ளிரவு 1.40 மணிக்கு காயத்திரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தாயும், குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.


Next Story