108 சங்காபிஷேக பிரதோஷ வழிபாடு


108 சங்காபிஷேக பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:30 AM IST (Updated: 22 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு ஈஸ்வரன் கோவிலில் 108 சங்காபிஷேக பிரதோஷ வழிபாடு நடந்தது

தேனி

கடமலைக்குண்டு மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் யாகசாலை மற்றும் 108 சங்குகளில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவருக்கு வண்ணமலர்களால் அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு, கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் டி.கே.ஆர் கணேசன், செயலாளர் நல்லாசிரியர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், ஊர் பெரியதனம் பால்ராஜ் மற்றும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story