108 சங்காபிஷேக பூஜை


108 சங்காபிஷேக பூஜை
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நேற்று நடந்தது.

திண்டுக்கல்

வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூைஜ நடத்தப்பட்டது. அதன்பின்னர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிமாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ராஜாங்க கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் மாரியம்மன், கைலாசநாதர், பகவதி, காளியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.


Related Tags :
Next Story