ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேம்
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேம் நடந்தது. முன்னதாக 108 சங்குகளில் புனித நீரை நிரப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்புகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாங்கூர் கிராமத்தில் நம்புவாருக்குஅன்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக சாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story