108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு


108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு
x

108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாத கலந்தாய்வு கூட்டம், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் செல்வகுமார் பேசினார். சங்கத்தின் நிதி நிலை குறித்து மண்டல குழு உறுப்பினர் வெங்கடேசன் பேசினார். பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆள் பற்றாக்குறை காரணம் காட்டி இரவில் 4 முதல் 5 ஆம்புலன்ஸ்களை இயக்கப்படாமல் சேவை நிறுத்தம் செய்வதை கைவிட வேண்டும். அந்த ஆம்புலன்ஸ்களை இயக்கிட புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். வருகிற 28-ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். சங்கத்தின் மாநில தலைமை எடுக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story