108 ஆம்புலன்ஸ்மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்துத்தேர்வுவிருத்தாசலத்தில் நாளை நடக்கிறது
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்துத்தேர்வு விருத்தாசலத்தில் நாளை நடக்கிறது.
108 அவசர கால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி.விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி) பங்கேற்கலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு 15 ஆயிரத்து 435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
டிரைவர் பணிக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 15 ஆயிரத்து 235 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வரவும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.