#லைவ் அப்டேட்ஸ்: 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு -முழு விவரம்


x
தினத்தந்தி 20 Jun 2022 10:15 AM IST (Updated: 20 Jun 2022 2:10 PM IST)
t-max-icont-min-icon

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.


Live Updates

  • 20 Jun 2022 10:31 AM IST


    ஜூன் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

  • 20 Jun 2022 10:31 AM IST


    பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடி தேர்வு

    * 12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும்

    * 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

  • 20 Jun 2022 10:29 AM IST


    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

    * 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி

    * 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி

  • 20 Jun 2022 10:29 AM IST

    தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

    தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் ராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளது.

    10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்து உள்ளது.

  • 20 Jun 2022 10:19 AM IST

    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது

    சென்னை, 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார்7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    மேலும் பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

    இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டு வருகிறது.


1 More update

Next Story