10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
தென்காசி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இதை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தென்காசி
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முதல் தேர்வான தமிழ் தேர்வு 81 தேர்வு மையங்களில் (4 தனித்தேர்வர்களுக்கான மையம் உட்பட) நடைபெற்றது. இதில் 10,449 மாணவர்களும், 9 ஆயிரத்து 790 மாணவிகளும் ஆக மொத்தம் 20,239 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 1,252 ஆசிரியர்களும், 114 நிலையான படை உறுப்பினர்களும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மதியம் தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் கேட்டபோது தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது, என்றனர்.
Related Tags :
Next Story