10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கியது


10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 10-ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கியது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின், தேர்வு தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் முகாம் அலுவலர் மாரிமுத்து மேற்பார்வையில் ஆசிரியர்கள் 564 பேர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் தாள் திருத்தும் பணியில் 120 ஆசிரியர்களும், ஆங்கிலத் தேர்வு தாள் திருத்தும் பணியில் 96 ஆசிரியர்களும், கணித தேர்வு தாள் திருத்தும் பணியில் 120 ஆசிரியர்களும், அறிவியல் தேர்வு தாள் திருத்தும் பணியில் 132 ஆசிரியர்களும், சமூக அறிவியல் தேர்வு தாள் திருத்தும் பணியில் 96 ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் ஆய்வு செய்தார். இப்பணி மே மாதம் 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story