தர்மபுரி அருகே 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை


தர்மபுரி அருகே 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:30 AM IST (Updated: 18 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

செல்போனை அதிகளவில் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் மனம் உடைந்த 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி அருகே நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

10-ம் வகுப்பு மாணவர்

தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் விஷ்ணுவரதன் (வயது 15). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் செல்போனை அதிக அளவில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட விஷ்ணுவரதன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story