10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராணி. இவர்களது இரண்டாவது மகள் லட்சுமி 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 1-ந் தேதி மாலையில் வீட்டில் லட்சுமி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவரது சகோதரி ஏன் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறாய்? புத்தகங்களை படி என்று திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக் கொண்ட லட்சுமி வீட்டில் இருக்கும் குளியலறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டாள். அவளை வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்து விட்டாள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.