ஓடும் ரெயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்


ஓடும் ரெயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு தனிப்படையினர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை செல்லும் ஓடும் ரெயிலில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா? எனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரெயிலில் அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது தனிப்படையினர் சோதனை செய்தனர்.

அதில் முன் பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் கழிவறை அருகே கிடந்த பையை எடுத்து பிரித்துப் பார்த்தனர். அதில் 7 பண்டல்களில் 11 கிலோ எடையிலான கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் கஞ்சாவை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story