கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கண் நீர் அழுத்த நோயாளிகளின் வசதிக்காக ரூ.11 லட்சத்தில் நவீன கருவி


கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கண் நீர் அழுத்த நோயாளிகளின் வசதிக்காக ரூ.11 லட்சத்தில் நவீன கருவி
x

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கண் நீர் அழுத்த நோயாளிகளின் வசதிக்காக ரூ.11 லட்சத்தில் நவீன கருவி அமைக்கப்பட்டது.

கடலூர்

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி மற்றும் டி.என்.பி. பட்டமேற்படிப்பு பயிற்சி நிறுவனத்தில் உள்ள கண் பிரிவில் கண் நீர் அழுத்த நோய் உள்ள நோயாளிகளுக்கு பக்கவாட்டு பார்வை திறன் கண்டறியும் நவீன கருவி ரூ.11 லட்சம் செலவில் தனியார் நிறுவனம் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதை நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி, திறந்து வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையை தொடங்கி வைத்தார்.

கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரன், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த வக்கீல் ராம்மோகன், தலைமை கண் மருத்துவர் அசோக்பாஸ்கர், மாவட்ட திட்ட மேலாளர் கேசவன், கண் டாக்டர்கள் சங்கீதா, சுமதி, குமுதவள்ளி, தீபலட்சுமி, இந்திரஜித், நிர்வாக அலுவலர், கண்பிரிவு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நீர் அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் உறுதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் கண்புரை நோய்க்கு அடுத்தபடியாக இந்த கண் நீர் அழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே 40 வயதுக்குமேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் கண் நீர் அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நலப்பணிகள் இணை இயக்குனர் தெரிவித்தார்.


Next Story