66 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 66 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 66 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
மயிலாடுதுறை அருகே மகாராஜபுரம்-சோழம்பேட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராஜகுமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகம் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
மக்களை தேடி மருத்துவம் திட்டம் போல மக்களை தேடி முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் தொடர்பாக இங்கு துறைகள் வாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு துறை அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது.
63 மனுக்கள்
இதேபோல ஒவ்வொறு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இங்கு மகாராஜபுரம் சுற்றியுள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடம் கடந்த ஒரு மாத காலமாக இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 63 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 42 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு இன்று நிறைவு நாளில் ஆணைகள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 21 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
நலத்திட்ட உதவிகள்
வருவாய்த்துறையின் சார்பில் 35 நபர்களுக்கு ரூ.8.94 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம் என மொத்தம் 66 நபர்களுக்கு ரூ.11.17 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை ஒன்றியக் குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா, சுமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.