பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டன.
புதுக்கோட்டை
கீரனூர்:
கீரனூர் அருகே பெரம்பூர், மேலக்காடு பகுதிகளில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதிகளை சேர்ந்த வீரமணி, வளத்தார், கனகராஜ், கருப்பையா, கணேசன், முனியாண்டி, சங்கர், சீனி, மற்றொரு வீரமணி, ஜவகர், உருமையா ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 சீட்டு கட்டுகள், ரூ.29 ஆயிரத்து 440, 10 செல்போன்கள், 5 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story