11 நில அபகரிப்பு மனுக்களுக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் 11 நில அபகரிப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது. உதவி கலெக்டர் தமிழரசி, சிறப்பு தாசில்தார் பகவதிபெருமாள், துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள்பானு மற்றும் போலீசார் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 11 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மனுமீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story