போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவ-மாணவிகள் இடைநீக்கம்


போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவ-மாணவிகள் இடைநீக்கம்
x

உசிலம்பட்டி கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவ-மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் கடந்த ஆண்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக கூறியும், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்க வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக மாணவ-மாணவிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 8 மாணவர்கள், 3 மாணவிகள் என 11 பேரை கல்லூரியில் இருந்து 10 தினங்களுக்கு இடைநீக்கம் செய்ததாக கல்லூரி முதல்வர் ஒ.ரவி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story