திருவாரூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


திருவாரூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x

திருவாரூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

தாசில்தார்கள் மாற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வலங்கைமான் தாசில்தாராக இருந்த சந்தான கோபாலகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறைக்கு தாசில்தாராகவும் அந்த பணியிடத்தில் இருந்த அன்பழகன் வலங்கைமான் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மன்னார்குடி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் இருந்த கார்த்திகேயன் மன்னார்குடி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி திருத்துறைப்பூண்டி தனி தாசில்தார் ஆகவும், அந்தப்பணியிடத்தில் பணியாற்றிய காரல் மார்க்ஸ் திருத்துறைப்பூண்டி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் தாசில்தார் சோமசுந்தரம் தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி தாசில்தாராகவும், அந்தப்பணியிடத்தில் பணியாற்றி வந்த குருமூர்த்தி கூத்தாநல்லூர் தாசில்தாராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பணியாற்றிய தெய்வநாயகி கூத்தாநல்லூர் தனி தாசில்தாராகவும், அந்த பணியிடத்தில் பணியாற்றி வந்த இஞ்ஞாசிராஜ் தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி தாசில்தார் ஆகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணிபுரிந்த திருமால் கலெக்டர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.


Next Story