குளத்தில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி


குளத்தில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி
x

தென்காசி அருகே குளத்தில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தனர்.

தென்காசி

தென்காசி அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் கற்பகநாதன் மகன் இளமாறன் (வயது 16). இவர் கணக்கப்பிள்ளை வலசையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலை சுமார் 3-30 மணியளவில் இவர் ஊருக்கு அருகில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது குளத்தில் இளமாறன் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் குளத்தில் குளித்தபோது, சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் இளமாறனின் உடலை உறவினர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story