நிலுவையில் உள்ள 11 வார சம்பளத்தை வழங்க வேண்டும்
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் உள்ள 11 வார சம்பளத்தை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் உள்ள 11 வார சம்பளத்தை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
100 நாள் வேலை
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில், அச்சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 11 வார சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். தாமத கூலியை இழப்பீடுடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
200 நாட்களாக உயர்த்தி...
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.