பல்லடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைது


பல்லடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைது
x
திருப்பூர்


பல்லடத்தில் இரும்பு உருக்காலையின்உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இரும்பு உருக்காலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை உள்ளது. இந்த ஆலை பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மாத இறுதியில் அதன் உரிமம் காலாவதியாக உள்ளது.

எனவே இந்த இரும்புஉருக்காலையின், உரிமத்தை புதுப்பித்துக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

110 பேர் கைது

அதன்படி நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது, பொதுமக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் ஈசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். அதன் பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றனர். ஆனால் அவர்களை பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சவுமியா (பல்லடம்),தனராஜ் (தாராபுரம்), சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுபாட்டு துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பல்லடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைதுபல்லடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைது

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 53 பெண்கள்உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story