சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

இலுப்பூரில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

ரேஷன் அரிசி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் வேம்பு தலைமையிலான போலீசார் இலுப்பூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.

1,100 கிலோ பறிமுதல்

அப்போது இலுப்பூர் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில், 1,100 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த முக்கண்ணாமலைப்பட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த பாண்டியன் (வயது 33) மற்றும் இலுப்பூர் ஜீவா நகரை சேர்ந்த மற்றொரு பாண்டியன் (36) ஆகிய 2 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story