கடந்த 7 மாதத்தில் அதிக பாரம் ஏற்றிய 115 வாகனங்கள் பறிமுதல்


கடந்த 7 மாதத்தில் அதிக பாரம் ஏற்றிய 115 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் அதிக பாரம் ஏற்றி வந்த 115 வாகனங்களை பறிமுதல் செய்து அபராத கட்டணமாக ரூ.59¼ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் அதிக பாரம் ஏற்றி வந்த 115 வாகனங்களை பறிமுதல் செய்து அபராத கட்டணமாக ரூ.59¼ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீர் சோதனை

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 2 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 வட்டார போக்குவரத்து அலுவலகங்களையும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி கவனித்து வருகிறார்.

இவருடைய தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள், தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

115 வாகனங்கள் பறிமுதல்

இந்தநிலையில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகங்கள் மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேஸ் (மார்த்தாண்டம்), கவின்ராஜ் (நாகர்கோவில் செயலாக்கம்), சக்திவேல் (நாகர்கோவில்) ஆகியோர் கடந்த 7 மாதங்களாக மேற்கொண்ட வாகன சோதனையின்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

அந்த வகையில் மொத்தம் 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்திய பிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மொத்தம் 115 வாகனங்களுக்கும் ரூ.59 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரி சசி தெரிவித்தார்.


Next Story