தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை ரூ.116 கோடியில் சீரமைக்க அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை


தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை ரூ.116 கோடியில் சீரமைக்க அரசாணை வெளியிட்ட  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை ரூ. 116 கோடியில் மறுசீரமைக்க அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

கருங்கல்,

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை ரூ. 116 கோடியில் மறுசீரமைக்க அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிரிழப்புகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகப்பு பகுதி சரியாக வடிவமைக்கப்படாததால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. எனவே துறைமுக கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய சட்டமன்றத்திலும், தமிழக முதல்-அமைச்சரையும், மீன்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் துறைமுக கட்டமைப்பை சீரமைக்க 3 கட்டங்களாக ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

அலை தடுப்பு சுவர்

கடந்த 28.12.2020 அன்று துறைமுகத்தின் மேற்கு பக்கமுள்ள பிரதான அலைத்தடுப்பு சுவரை 200 மீட்டர் நீட்டிப்பு செய்யவும், சேதமடைந்துள்ள பிரதான அலைதடுப்பு சுவரின் முகப்பு பகுதியை சீரமைக்கவும் ரூ.77 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

26.2.2021 அன்று துறைமுகத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

27.10.2021 அன்று நடைபெற்ற 11-வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில், பிரதான அலை தடுப்பு சுவரை 633 மீட்டர் நீட்டிப்பு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரூ.116 கோடி

தற்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க தமிழக அரசால் 13.10.2022 அன்று ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கி தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அரசாணை பிறப்பித்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story