சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது
x

சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே புறவழிச்சாலை பகுதியில் சுடுகாட்டிற்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் சாலை மறியல் கைவிடப்படவில்லை. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.


Next Story