ஸ்கேட்டிங் மூலம் 12 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பயணம்


ஸ்கேட்டிங் மூலம் 12 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பயணம்
x

காஷ்மீரில் இருந்து ஸ்கேட்டிங் மூலம் 12 மாணவ, மாணவிகள் மேற்கொண்ட விழிப்புணர்வு பயணம் நேற்று குழித்துறை வந்தடைந்தது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

காஷ்மீரில் இருந்து ஸ்கேட்டிங் மூலம் 12 மாணவ, மாணவிகள் மேற்கொண்ட விழிப்புணர்வு பயணம் நேற்று குழித்துறை வந்தடைந்தது.

ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு

ஆரோக்கியமான இந்தியா, வளங்கள் நிறைந்த இந்தியா மற்றும் சுற்றுலா வளர்ச்சி, இயற்கை விவசாய வளர்ச்சி போன்றவற்றை வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் காஷ்மீரில் இருந்து ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பயணத்தை தொடங்கிய அவர்கள் 13 மாநிலத்திற்கு உட்பட்ட 100 நகரம், 10 ஆயிரம் கிராமங்களை கடந்து நேற்று குழித்துறை வந்தடைந்தனர். கன்னியாகுமரியில் தனது 90 நாட்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

இவர்கள் பாதுகாப்புக்கு சிலர் உடன் வந்தனர்.

கன்னியாகுமரியில் நிறைவடைகிறது

இந்த குழுவின் தலைவர் வாரணாசியை சேர்ந்த சோனி சவ்ரஷ்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் டோக்ரா ஆகியோர் கூறுகையில்,

ஒரு நாளில் 60 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறோம். இன்று கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்கிறோம். வரும் வழியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

உலக அளவில் எந்த பெண்களும் இவ்வளவு தூரம் ஸ்கேட்டிங் மூலம் சென்றதில்லை. எங்கள் குழுவில் மாணவிகளுடன் நாங்கள் முதல் முறையாக சாதனை படைத்துள்ளோம். எங்களது பயணம் மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story