கல்குவாரி தொழிலாளர்களின் 12 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு


கல்குவாரி தொழிலாளர்களின் 12 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு
x

நீண்ட நாட்களாக வராமல் இருந்த கல்குவாரி தொழிலாளர்களின் 12 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

பெரம்பலூர்

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரிகளுக்கு வந்து நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளில் 12 பேர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தனர். இதையடுத்து அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் பெரம்பலூர் வட்டார வள மைய குழுவினர் நேற்று காலை 7 மணியளவில் குழுவாக சென்று அந்த மாணவ-மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தையும், அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி அறிவுரைகளை வழங்கினர். பின்னர் அந்த 12 மாணவ-மாணவிகளை கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


Next Story