ஆங்கில புத்தாண்டில் 12 குழந்தைகள் பிறந்தன
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டில் 12 குழந்தைகள் பிறந்தன.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் 12, குழந்தைகள் பிறந்தது. இதில் 4 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் ஆகும். இதுகுறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் கே.டி.சிவகுமார் கூறுகையில் தமிழ்நாட்டிலேயே தாலுகா மருத்துவமனைகளில் அதிக பிரசவம் பார்ப்பதில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. கடந்த வருடம் மட்டும் 6,512 குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 முதல் 600 குழந்தைகள் பிறக்கிறது. இந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் 8 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், 4 குழந்தைகள் அறுவைச்சிகிச்சை மூலம் பிறந்தது. தமிழ்நாட்டிலேயே தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனையாக இரண்டாவது பரிசு பெற்றுள்ளோம் எனக் கூறினார். குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் செந்தில்குமரன், மருத்துவமனை மேலாளர் கோவிந்தன் உடனிருந்தனர்.