சுருளகோடு அருகே 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
சுருளகோடு அருகே 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
கன்னியாகுமரி
குலசேகரம்:
சுருளகோடு அருகே 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
சுருளகோடு அருகே மூலையறை பகுதியில் தனிஸ்லாஸ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ராஜநாகம் ஒன்று செல்வதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி வேளிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனச்சரகர் மணிமாறன் தலைமையில், வனவர் பிரான்சிஸ், வனக்காப்பாளர்கள் ஜெயக்குமார், சரவணன், வேட்டை தடுப்பு காவலர்கள் ஷாஜி, கேசவன், பாலசுப்பிரமணியன், பிரபுசிங், சுமன் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலையறை பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ரப்பர் தோட்டத்தில் பதுங்கி இருந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை பெருஞ்சாணி அணை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story