12 செம்மறி ஆடுகள் திருட்டு


12 செம்மறி ஆடுகள் திருட்டு
x

12 செம்மறி ஆடுகள் திருட்டு

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவார். அதே போல் கடந்த மாதம் 31-ந் தேதி வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு மறுநாள் காலை 6 மணிக்கு வந்து பார்க்கும்போது பட்டியில் இருந்த 35 ஆடுகளில் 12 ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரன் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Related Tags :
Next Story